வரும் 13ம் தேதி ராமநாதபுரம் வருகை தருகிறார் பிரதமர் மோடி
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரத்தில்மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதன் பிறகு ராமநாதபுரம் பாரதிநகர் அம்மா பூங்கா அருகில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து முரளிதரன் மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கூறியதாவது:
வருகின்ற 13-ந் தேதி காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டரின் மூலம் ராமநாதபுரம் வரும் பிரதமர் மோடிக்கு சிறந்த வரவேற்பு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அளிக்கப்படுகிறது.
பிரதமர் மோடி பத்து நாற்பத்தி (10:40 )ஐந்து மணிக்கு பிரச்சாரம் மேடைக்கு வருகிறார் இந்த கூட்டத்தில் தமிழக முதல்- அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி , மணிகண்டன், விஜய பாஸ்கர், ராஜா முதலிய அதிமுக எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
சிவகங்கை தென்காசி ராமநாதபுரம் விருதுநகர் தூத்துக்குடி போன்ற பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பல்வேறு வேட்பாளர்களும் உடன் கலந்து கொள்கின்றனர்.
தூத்துக்குடி நெல்லை விருதுநகர் ராமநாதபுரம் புதுக்கோட்டை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான அதிகமானவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
.