புனேவில் உள்ள தத்தா ஃபுகே ஒரு மிகப்பெரிய பணக்காரர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் 22 காரட் தூய தங்கத்திலான ஒரு தங்க சட்டையை செய்தார். இந்த தங்க சட்டையில் தங்கத்தாலான பொத்தான்கள் மற்றும் பெல்ட்டால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டையின் எடை 3 கிலோவிற்கு மேல் இருக்கும். இந்த சட்டையின் விலை 153 கோடி ரூபாயாகும்.
இவர் தன்னுடைய உடம்பில் 5 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளை எப்போதும் அணிந்திருப்பார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு உலகின் விலை உயர்ந்த சட்டையை அணிந்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். மேலும் தத்தா ஃபுகே கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.