Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் பண்ணவே கூடாது… மொத்தம் 153 வழக்குகள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்கள் மீது இதுவரை 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரியக் கூடாது எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்த 137 நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த கடைகள் மற்றும் பொதுமக்கள் மீது 22 வழக்குகள் போடப்பட்டு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஊரடங்கு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இதுவரை 153 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், 81 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கபட்டதாகவும் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |