செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,185 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை 45 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2ம் கட்ட பட்டியலில் பாதிக்கப்பட்டவர்களின் புதிய எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, 3ம் கட்ட பட்டியலில் மொத்தமாக 155 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை, 2,027 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,945-ல் இருந்து 2,100 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக செங்கல்பட்டில் 57 ஆக இருந்த பலி எண்ணிக்கை, தற்போது 60 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 6வது நாளாக முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதில், 7 நகராட்சி மற்றும் 11 பேரூராட்சிகளிலும் 55 ஊராட்சிகள் உள்ளடங்கும். இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நடமாடும் மருத்துவக்குழு மற்றும் சுகாதார அதிகாரிகள் 1,110 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் ரத்த பரிசோதனை அதிக அளவில் எடுக்கப்பட்டுவருகிறது. இதன் காரணமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.