Categories
தேசிய செய்திகள்

அரிக்கன்மேடு மணல் திருட்டு… காவலர்கள் குழு அமைத்து தீவிர ஆய்வு…!!

அரிக்கன்மேடு பகுதியில் தொடர்ந்து நடைபெற்ற மணல் கொள்ளை, தலைமை கண்காணிப்பாளர் குழு மூலம் இன்று தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்து அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த அரிக்கன்மேடு பகுதியில் அரியாங்குப்பம் ஆற்றின் கரை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் வெகுவாக இருக்காது. இந்த சூழலை  பயன்படுத்தி இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் மணல் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கிருந்து மணல் திருடப்பட்டு படகு மூலமாகவும், மாட்டு வண்டிகள் மூலமாகவும் கொண்டு செல்வதாக புகார் கிடைத்துள்ளது .

இந்நிலையில் நேற்று மினி லாரி ரகத்தைச் சேர்ந்த வண்டிகளில் மணல் திருட்டு நடந்து வருவதாக அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரை கைது செய்தனர். மேலும் இதுபோன்ற மணல் கொள்ளையை கட்டுப்படுத்தும் விதமாக தெற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் அரியாங்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர்கள் தனச்செல்வம், புருஷோத்தமன் போன்றோர் ஆய்வு நடத்தி இந்த மணல் கொள்ளையை தடுக்கும் விதமாக ஜேசிபி எந்திரம் மூலம் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு தடை ஏற்படுத்தப்பட்டது. இந்த தடுப்பு  நடவடிக்கையின்போது உதவி ஆய்வாளர் ராஜன், காவலர்கள் உடனிருந்தார்கள்.

Categories

Tech |