Categories
தேசிய செய்திகள்

லெபனான் வெடி விபத்து… விமானம் மூலம் இந்தியா நிவாரண உதவி…!!

லெபனான் வெடி விபத்திற்கு இந்திய அரசு நிவாரணப் பொருள்களை விமானம் மூலம் அனுப்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்

லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில், சென்ற வாரம் பயங்கர வெடி விபத்து ஒன்று நடந்தது. இந்த பயங்கர வெடி விபத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 6,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் தங்களது வீடுகளை இழந்து பரிதாபமான நிலைக்குத் ஆளாகி உள்ளனர். இந்நிலையில், லெபனான் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்திய அரசு, மருந்துகள், உணவு பொருட்கள் போன்ற நிவாரணப் பொருள்களை அனுப்பியுள்ளது.

இது பற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறுகையில், “பெய்ரூட்டில் ஏற்பட்ட துயர வெடி விபத்துக்குப் பிறகு இந்திய அரசு, லெபனான் மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. மனிதாபிமான உதவியின்படி 58 மெட்ரிக் டன் அவசர கால முக்கியமான மருத்துவ, உணவுப் பொருட்களை பெய்ரூட்டுக்கு ஐ.ஏ.எஃப். சி17 விமானம் மூலம் அனுப்பியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |