சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பிரபல நிறுவனத்தில் இருந்து ரூ 13.5 கோடி பறிமுதல் செய்ப்பட்டுள்ளது
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததையடுத்து உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லும் பணம் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்ப்பட்டு வருகிறது.
மேலும் வருமானவரித்துறையினரும் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் வருமானத்துறையினர் சென்னை மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 7 இடங்களில் நடத்திய தீவிர சோதனையில் இதில் சென்னையில் உள்ள பிரபல கட்டட நிறுவனத்தில் சுமார் 13.5 கோடி கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.