தூத்த்துக்குடி மதிமுக பொருளாளர் நீக்கப்படுவதாக வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது .இதற்கான பிரச்சாரத்தில் அணைத்து கட்சிகளும் தீவிரமாய் ஈடுபட்டுவருகின்றனர். திமுக கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்ப்பட்டு வாக்கு சேகரிப்பும் நடைபெற்று வருகின்றது
இந்நிலையில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் , தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக கழகப் பொருளாளர் எம்.செண்பகப் பெருமாள், கட்சியின் விதிகளை மீறிச் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.தேர்தல் வர இன்னும் நான்கு நாள்களே உள்ள நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ மேற்கொண்ட நடவடிக்கையால் கட்சியில் பல குழப்பங்கள், சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன.