Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 15 நாட்கள் முழு கடையடைப்பு…. வணிகர் சங்க தலைவர் பேட்டி…!!

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசுடன் இணைந்து 15 நாட்கள் வரை கடைகளை அடைக்க தயாராக இருப்பதாக வணிகர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு இன்றுவரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இருப்பினும் ஒருசில தளர்வுகளின் அடிப்படையில் தனிக் கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்ட சமயத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது பெரிய ஆபத்தை உருவாக்கி வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாக கூடிக்கொண்டே வருகிறது.

எனவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்று கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து வணிகர் சங்க தலைவர் விக்ரமன் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தால், அரசுக்கும், சுகாதாரத் துறைக்கும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், 15 நாள்கள் வரை கடைகளை மூட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் முழு ஊரடங்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |