உங்கள் மொபைலில் உள்ள போட்டோ மற்றும் வீடியோக்களை பாதுகாக்க கீழ்கண்ட செயலிகளை பயன்படுத்தலாம்.
பொதுவாக அனைவரும் தங்களது மொபைலில் சந்திக்கக் கூடிய ஒரு பிரச்சனை என்னவென்றால், அது ஸ்டோரேஜ் பிரச்சனை தான். இந்த பிரச்சனை வரும்போது செய்வதறியாது சில நிமிடங்களில் எதையோ நாம் டெலிட் செய்து விடுவோம். அதன் பின்பே நாம் முக்கியத்துவமாக கருதும் சில போட்டோக்கள் வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டிருப்பதைஅறிந்து வருத்தப்படுவோம்.
ஆகவே இதை தடுப்பதற்காகவே பல செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அந்த வகையில், கிளவுட் போட்டோ சேகரிப்பு செயலிகளான கூகுள் போட்டோஸ், டிராப்பாக்ஸ், பாக்ஸ் ஆன்திரைவ் , ஆப்பிள் போட்டோஸ் உள்ளிட்டவைகள் மூலம் உங்கள் புகைப்படங்களை அழியாமல் பாதுகாக்க ஆட்டோ பேக்கப், கிளவுட் எடிட்டிங், தேடுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இவை ஒவ்வொன்றிலும் ஒரு கணக்குக்கும் சராசரியாக 15GB வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொபைலில் storage பிரச்சனை வராமல் இருப்பதுடன் போட்டோ வீடியோக்கள் பாதுகாப்பாக இருக்கும்.