வடகொரியா இந்த வருடத்தின் 15-வது ஏவுகணையை இன்று பரிசோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து பக்கத்து நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வடகொரியா அதனை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதனை செய்து வருகிறது. அதன்படி, கடந்த வியாழக்கிழமை அன்று கண்டம் தாண்டி கண்டம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்தது.
இந்நிலையில் இந்த வருடத்தில் 15-ஆம் முறையாக இன்று அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை ஜப்பான் நாட்டின் கடல்பகுதிக்கு அருகில் இருக்கும் கிழக்கு கடற்கரையில் பரிசோதித்திருப்பதாக தென்கொரிய அரசு, தெரிவித்திருக்கிறது. இந்த தகவலை ஜப்பானின் கடலோர காவல்படை உறுதி செய்திருக்கிறது.