தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மேஸ்திரி ஒருவர் சிறுமியை திருமணம் செய்த காரணத்தால் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்
காசி என்பவர் தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். இவருடைய மகன் அன்பு என்பவர் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி சென்றிருந்தபோது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சிறுமி 9 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர் . குழந்தை நல அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை திருமணம் செய்த அன்பு என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.