தமிழகத்தில் 16 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் மக்கள் அனைவரும் கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி என்னும் ஆழிப்பேரலையால் தமிழகம் பெரும் அழிவை சந்தித்தது. குடும்ப உறவினர்களை கடலுக்கு காவு கொடுத்துவிட்டு இன்னும் அவர்களின் நினைவில் வாடுபவர்கள் பலர். காணாமல் போனவர்கள் திரும்ப வருவார்களா என்ற எதிர்பார்ப்பில் பலர் என சுனாமி என்னும் பேரழகன் தந்த ஆறாத வடுக்களை அளித்து சென்ற கறுப்பு தினத்தின் 16 ஆம் ஆண்டு நினைவு நால் இன்று.
இதனையடுத்து வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை யில் சுனாமி நினைவு தினத்தை ஒட்டி அமைச்சர் ஓ.எஸ். மணியன், செல்வராஜ் உள்ளிட்டோர் கடலில் பாலை ஊற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் மீன்பிடி இறங்குதளத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர் மற்றும் செருதூர் உள்ளிட்ட நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு இன்று செல்லவில்லை.