தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதனால் மாநில முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியில் உள்ள மேற்கு காவல் நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், எங்களுக்கு எதிரி அல்ல சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என SDPI குமரன் நகர்- PFI குமரன் நகர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அது மட்டுமல்லாமல் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று மர்ம நபர்கள் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து குறிப்பாக தற்போதுள்ள சூழ்நிலையை வேறு யாரும் தவறுதலாக பயன்படுத்தி திசை திருப்பும் நோக்கில் செய்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திடீரென காவல் நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.