16 கண் பாலம் அருகே பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பருவ மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளில் இருந்து சென்ற எட்டாம் தேதி முதல் காவிரி ஆற்றிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. இதனால் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.
மேலும் 16 கண் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றார்கள். மேலும் ஈரோடு, சேலம், நாமக்கல் , கரூர், அரியலூர், திருச்சி தஞ்சாவூர் திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கின்றது.