இந்திய அணி வீரரும், ராஜஸ்தான் அணி வீரருமான அஸ்வின் சிஎஸ்கேவில் ஜடேஜா இடம்பிடித்திருப்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்களை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 2023 ஆம் ஆண்டுக்கான 16 வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை சமர்ப்பித்தது..
அதில் குறிப்பாக சென்னை அணியின் ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்க வைத்துள்ளது. ஏனென்றால் சென்னை அணியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக விளையாடி வரும் ஜடேஜா வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியுடன் நீடிப்பாரா, மாட்டாரா? அல்லது டிரேடிங் முறையில் மற்ற அணிகளுக்கு செல்வாரா என பல்வேறு கேள்விகள் எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜடேஜாவை சிஎஸ்கே அணி தக்க வைத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்..
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஐபிஎல் குறித்த கருத்துகளை தனது யூடியூப் சேனலில் பேசி வரும் இந்திய அணி வீரரும், ராஜஸ்தான் அணி வீரருமான ரவிசந்திரன் அஸ்வின் சிஎஸ்கேவில் ஜடேஜா இருப்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது, ரவீந்திர ஜடஜாவும், வில்லியம்சனும் டிரேடிங் முறையில் மாற்றம் செய்யப்படுவார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது. ரவீந்திர ஜடேஜா இருக்கப் போகிறாரா? இல்லையா? என்று நிறையபேர் கேட்டார்கள். ரொம்ப கஷ்டம், ரவீந்திர ஜடேஜா மாதிரி ஒரு பிளேயர், நான் வேற அணிக்கு போகிறேன், நான் வரவில்லை என்று சொன்னால் அந்த டீமுக்கு பாதிப்பு என்ன? இருதலை பட்சமாக பாருங்கள்.
ஒன்று வந்து அவர் போறாரு என்பது ஒரு பக்கம். அந்த பிளேயர் வெளியே போனாலும் சிஎஸ்கேவுக்கு 16 கோடி கிடைக்குது என்று சில பேர் சொல்கிறார்கள். ஆனாலும் கூட அந்த மாதிரி ஒரு பிளேயர், இந்தியன் பிளேயரை எப்படி ரீபிளேஸ் பண்ண முடியும். யாரை வைத்து ரிப்ளேஸ் பண்ண போறீங்க, அது ஒருபக்கம், இரண்டாவது அவரை கொடுத்துவிட்டு, வேற எங்கேயாவது போய் அவர் உட்கார்ந்தார் (வேறு அணிக்கு போனால்) என்றால் அந்த அணி எப்படி இருக்கும். அந்த அணி பலமாகும் என்பதை யோசித்து பாருங்கள். இதனால் தான் அவரின் மதிப்பை உணர்ந்து சென்னை அணி நிர்வாகம் தக்க வைத்து இருக்கிறது என தெரிவித்தார்..
மேலும் அவர் சி.எஸ்.கே 20 கோடி வச்சிருக்காங்க, அவங்க மயங் அகர்வால், ரொமாரியோ ஷெப்பர்டு, கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன் ஆகியோரை வாங்க முயற்சிக்கலாம், அதில் குறிப்பாக நிக்கோலஸ் பூரானை வாங்க முயற்சிகலாம். ஏனென்றால் இடகை வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்கு நன்றாக ஆடியிருக்கிறார். எனவே அவரைப் போல ஒருவர் தேவை என்பதால் பூரனை வாங்க வாய்ப்புள்ளதாக தனது கருத்தை கூறினார்..