Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

16 சிக்ஸர்…! இரட்டை சதம் விளாசிய ருதுராஜ்…. 330 ரன்கள் குவித்த மகாராஷ்டிரா அணி.!!

மகாராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இன்றைய காலிறுதி போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. அதன்படி மகாராஷ்டிரா அணியின் துவக்க வீரர்களாக ராகுல் திரிபாதி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். இதில் ராகுல் திரிபாதி  9 ரன்களில் அவுட் ஆனார்.. அதைத் தொடர்ந்து வந்த சத்யஜீத் பச்சாவ் 11 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் ருதுராஜ் – சத்யஜீத் பச்சாவ் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிவந்தனர்.

இதையடுத்து சத்யஜீத் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.  பின் அசிம் காசியுடன் ஜோடி சேர்ந்து ருதுராஜ் அதிரடியாக ஆடினார். தொடர்ந்து ருதுராஜ் சிறப்பாக ஆடி சதம் விளாசிய நிலையில், காசி  37 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பின் வந்த திவ்யாங் ஹிம்கனேகர் 1  ரன்னில் அவுட் ஆனார். ஆனாலும் கடைசி வரைக்கும் அவுட் ஆகாமல் ருதுராஜ் 159 பந்துகளில் 10 பவுண்டரி, 16 சிக்ஸர் 220 ரன்கள் குவித்தார். இரட்டை சதம் விளாசிய ருதுராஜ் குறிப்பாக 49 வது ஓவரில் மட்டும் நோபால் உட்பட 7 சிக்ஸர்கள் விளாசி உள்ளார். இறுதியில் மகாராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது.

Categories

Tech |