Categories
மாநில செய்திகள்

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில்  தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல தேங்கி காட்சியளிக்கிறது.

இந்நிலையில்  நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |