Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“16 லட்சம்” மானிய விலையில் எந்திரங்கள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

விவசாயிகளுக்கு எந்திரங்கள் வழங்கும்  விழாவை அமைச்சர் தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் வன்னிவேடு கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு  மானிய விலையில் எந்திரங்கள் வழங்கப்பட்டது. இது கால்நடை வளர்க்கும்  97 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு புல் வெட்டும் மற்றும் புல்  அறுக்கும் எந்திரங்கள் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 16 லட்சத்து 56 ஆயிரத்து 436 ரூபாய் ஆகும். இதை விவசாயிகளுக்கு அமைச்சர் காந்தி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், கால்நடை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், உதவி இயக்குனர் பாஸ்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர் கற்பகராணி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா நகர்மன்ற தலைவர் ஹரிணி தில்லை, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |