Categories
உலக செய்திகள்

16 வயதில் இளைஞர் செய்த கொடூரத்திற்காக…. 115 ஆண்டுகள் சிறை தண்டனை…. அதிர்ச்சி பின்னணி …!!

இளைஞர் ஒருவர் 16 வயதில் செய்த கொடூர செயலுக்காக ஒன்பது வருடங்கள் கழித்து 115 ஆண்டுகள்  சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள இந்தியானா என்ற மாகாணத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் வின்ஸ்டன் ஏர்ல் கார்பெட். கடந்த 2011 ஆம் வருடத்தில் கார்பெட் கல்லூரி பேராசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், மேலும் அவரது மனைவியை கத்தியால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு 115 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் தற்போது கார்பெட்ட்டுக்கு கொலை குற்றத்திற்காக 65 வருடங்களும், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 50 வருடங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கார்பெட் குற்றங்களை செய்தபோது அவருக்கு வயது 16. கடந்த 2011-ம் வருடத்தில் அக்டோபர் மாதம் கோசன் என்ற கல்லூரியின் உயிரியல் பேராசிரியரான ஜேம்ஸ் மில்லர் அவரது மனைவி லிண்டாவுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது கார்பெட் திடீரென வீட்டிற்குள் புகுந்து லிண்டாவை கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்க சென்ற மில்லரையும் கத்தியால் தாக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த மில்லர் போராடி கார்பெட்டை வீட்டிலிருந்து வெளியேற்றுள்ளார். பின் கீழே விழுந்த மில்லர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த வழக்கு பல வருடங்களாக குற்றத்திற்கான நபரை பற்றிய விபரங்கள் கிடைக்காமல் இருந்துள்ளது.

இதனால் கார்பெட் உயர்கல்வியை முடித்து இரண்டு வருடங்கள் கடற்படையிலும்  பணியாற்றியுள்ளார். ஏழு வருடங்கள் குற்றவாளியை கண்டு பிடிக்காமல் இருந்த நிலையில் சம்பவ இடத்தில் கிடைத்த டிஎன்ஏ ஆதாரங்களைக் கொண்டு தொடர்ந்து குற்றவாளியை தேடி வந்துள்ளனர். அப்போது தான் டிஎன்ஏ கார்பெட்டின் குடும்பத்தார் சிலரது டிஎன்ஏ உடன் ஒத்துப்போனதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து 2018 ஆம் வருடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கார்பெட்டை கைது செய்துள்ளனர். ஆனால் அவர் தன் டிஎன்ஏ அங்கு வந்தது எப்படி என்று தனக்கு தெரியாது என்றும் அவர் வீட்டிற்கு நான் சென்றதே இல்லை என்றும் கூறி குற்றத்தை ஏற்க மறுத்துள்ளார். மேலும் ஒன்பது வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் கார்பெட் தான் குற்றவாளி என்று தற்போது நிரூபிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |