Categories
பல்சுவை

“16 வயதில் சந்தித்த அவமானம்” கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை…. அவர் யார் தெரியுமா….?

பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் சந்தித்த அவமானம் தான் அவரை சாதிக்க வைத்ததாக கூறியுள்ளார்.

கடந்த 1989-ஆம் வருடம் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி என்ற இடத்தில் இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் நடைபெற்றது. இந்த மேட்ச்சில் இந்தியாவின்‌ ஸ்கோர் 38/4 ஆக இருந்தது. அப்போது 16 வயது சிறுவன் ஒருவர் பேட்டிங் செய்வதற்காக களத்தில் இறங்குகிறார். இந்த சிறுவன் 1 ரன் மட்டும் அடித்திருந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பந்துவீச்சாளர் சிறுவனின் மூக்கின் மீது பந்தை வீசியுள்ளார். இதனால் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. மேலும் பாகிஸ்தான் வீரர்கள் இதில் சிறுவனையும் கிண்டல் செய்து வெளியே அனுப்பிவிட்டால் ஜெயித்து விடலாம் என நினைத்து கேலி செய்துள்ளனர். இவர் தன்னுடைய 16 வயதில் இப்படி ஒரு கேவலமான வார்த்தைகளை என்னுடைய வாழ்நாளில் கேட்டதில்லை என கூறி மிகவும் வருத்தப்பட்டார்.

இந்த மேட்ச்சில் இருந்து வெளியே வருமாறு இந்திய அணியினர் சிறுவனிடம் கூறியுள்ளனர். ஆனால் மேட்ச்சை விட்டு வெளியே வந்து விட்டால் சிறுவன் இந்திய அணியில் தன்னை எடுத்தது தவறு என்று நினைத்து விடுவார்கள் என எண்ணியுள்ளார். இதன் காரணமாக மேட்சை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து விளையாடினார். இதனால் இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணி 2-ம் ஒரே புள்ளியில் இருந்தது. இந்த 16 வயது சிறுவன் யார் தெரியுமா? இவர் வேறு யாரும் இல்லை நம் அனைவருக்கும் தெரிந்த சச்சின் டெண்டுல்கர் தான். இது பற்றி சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய சுய சரிதை புத்தகத்தில் எழுதியுள்ளார்.

Categories

Tech |