Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமியிடம் அத்துமீறிய நபர்… “அடித்து துவைத்த ஊர் மக்கள்”…. பின் நடந்தது என்ன?

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை கிராம மக்கள் அடித்து துவைத்த நிலையில்,  மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது இறந்து போனார்..

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். 42 வயதான இவர் கடந்த மாதம் அதே கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் தனியாக இருந்த சமயம் பார்த்து பாலியல் தொல்லை அளித்திருக்கிறார்..

இதனை கேள்விப்பட்ட ஊர் மக்கள் ஆத்திரத்தில் மணிகண்டனை பிடித்து கட்டி வைத்து அடித்து . சரமாரியாக தாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.. இதனால் மணிகண்டனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சைக்குப் பின் ஊர் திரும்பிய மணிகண்டனிடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்குள்  நுழையும்போதே மணிகண்டனின் உடல்நிலை மிகவும்  மோசமானது.

இதனையடுத்து போலீசார் அவரை மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மணிகண்டன் வழியிலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.. போலீசார் மர்மசாவு என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Categories

Tech |