பத்தாம் வகுப்பு மாணவியை கொலை செய்து ஏரியில் வீசிய வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் சென்ற சில மாதங்களாக இவர் பள்ளிக்கு சரிவர செல்லவில்லை. சென்ற சில நாட்களுக்கு முன்பு மாணவியை வீட்டிலிருந்து காணவில்லை. இது குறித்து பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் மட்டும் கொடுத்த நிலையில் எழுத்து பூர்வ புகார் எதுவும் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் சென்ற 23ஆம் தேதி கும்முடிபூண்டி அருகே ஆராமணி ஏரியில் மாணவி பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் வெளியானது. பிரவீன் என்ற இளைஞர் மாணவியை காதலித்ததாக சொல்லப்படுகின்றது. சென்ற 22ஆம் தேதி இரவு ஆராமணி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார்.
அவருடன் பிரவீனின் உறவினரும் சென்றுள்ளார். பின் மாணவியை கட்டாயப்படுத்தி பிரவீன் உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகின்றது. இதை தொடர்ந்து மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரவீனிடம் கேட்க அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்கின்றாய். உனது நடத்தையை பிடிக்கவில்லை எனக் கூறி திருமணம் செய்து கொள்ள முடியாது என சொல்லியதாக தெரிகின்றது. இதனால் மாணவி போலீசில் புகார் கொடுப்பதாக கூறியிருக்கின்றார்.
இதில் ஆத்திரம் அடைந்த பிரவீன் அங்கிருந்த கட்டையால் மாணவியின் தலையில் பலமாக தாக்கி கழுத்தை நெரித்து, உறவினரான 17 வயது சிறுவனுடன் கொலை செய்ததாக சொல்லப்படுகின்றது. பின் இருவரும் மாணவியின் உடலை 200 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஏரியில் வீசிவிட்டு சென்றதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. மேலும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் வழக்கில் சேர்க்கப்பட்டு பிரவீனை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தார்கள். மேலும் உடன் இருந்த 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள்.