மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி எட்டு பேர் கொண்ட கும்பலால் 12 மணி நேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கடற்கரை அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதன் பிறகு அங்கு வந்த இளைஞரின் கூட்டாளிகள் ஏழு பேரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரவு 8 மணிக்கு நடந்த இந்த கொடுமை மறுநாள் காலையில் 10:00 மணி வரை தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 12 மணி நேரத்திற்கு மேல் சிறுமியை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் தனக்கு நடந்த கொடூரம் தொடர்பாக சிறுமி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய எட்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெறும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.