Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி…. 23 நாட்களிலே கலைந்த கனவு…. போக்சோவில் கைதான வாலிபர்….!!

நெல்லையில் வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் லோடு ஆட்டோ டிரைவரான அஜித் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் 16 வயதான சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் அவர்களது பெற்றோர்கள் இருவரது காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே இருவரும் கடந்த 20 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சுத்தமல்லி காவல்துறையினர் அஜித்தை போக்சோ சட்டத்தின் அடிப்படையில் கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு நெல்லையிலிருக்கும் சரணாலயத்தில் ஒப்படைத்தார்கள்.

Categories

Tech |