தமிழ் திரையுலகில் 2000களில் விக்ரம், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் லைலா இவர் ரசிகர்களால் கன்னக்குளி அழகி என்று பாராட்டப் பெற்றவர். திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகி இருந்த லைலா 16 வருடங்கள் கழித்து மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். அதாவது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் “சர்தார்” படத்தில் நடிக்க உள்ளதாக தனது சோசியல் மீடியாவில் லைலா பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் ஏற்கனவே ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா என்று இரு கதாநாயகிகள் இருக்கும் நிலையில் முக்கிய வேடத்தில் சிம்ரன் நடித்து வருகிறார். இதை அடுத்து லைலாவையும் இந்த படத்தில் சேர்த்தது ஆச்சரியமிக்கது. ஏற்கனவே சிம்ரன்,லைலா இருவரும் இணைந்து “பார்த்தேன் ரசித்தேன்” படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.