16 ஆண்டுகள் பணி செய்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ததற்காக பன்னாட்டு நிறுவனம் அவருக்கு 125 மில்லியன் டாலர்களை அளிக்கவேண்டும் என அமெரிக்கா நீதிமன்றம் கூறியுள்ளது.
அமெரிக்காவில் மார்லோ ஸ்பேத் என்ற பெண் வால்மார்ட் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் 16 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் டவுன் சிண்ட்ரோம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வால்மார்ட் நிறுவனமானது அவரது பணியில் நேர மாற்றம் செய்துள்ளது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக அந்த நேரத்தில் பணியாற்ற முடியாமல் போயுள்ளது. அதனால் வால்மார்ட் நிறுவனம் அந்த பெண்ணை பணிநீக்கம் செய்துள்ளது.
இதனை தொடர்ந்து அமெரிக்கா நீதிமன்றம் 16 ஆண்டுகள் பணி செய்த ஊழியரை பணிநீக்கம் செய்ததற்காக 125 மில்லியன் டாலரை பன்னாட்டு நிறுவனம் அவருக்கு செலுத்த வேண்டும் என கூறியுள்ளது. இது அனைவருக்கும் வேலைகளில் சமவாய்ப்பு ஏற்படுத்தி தரும் ஆணையத்தின் மூலமாக ஊழியரின் நலனை கருத்தில் வைத்தே சட்டத்தின் வாயிலாக நடைபெற்றுள்ளது.