Categories
உலக செய்திகள்

16 நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு தடை.. பஹ்ரைன் அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

பக்ரைன் அரசு கொரோனா அச்சம் காரணமாக சுமார் 16 நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நாட்டிற்குள் வர தற்காலிகமாக தடை விதித்திருக்கிறது.

உலகிலுள்ள பல நாடுகள் கொரோனா அதிகமுள்ள நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் நாடுகளுக்கு வர தடை அறிவித்து வருகிறது. மேலும் கொரோனா பரவல் குறைய தொடங்கியவுடன் தடையை நீக்கி விடுகிறது. அதாவது கொரோனா பரவல் பிற நாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்காக இந்த தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி பக்ரைன் அரசு, சுமார் 16 நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நாடுகளுக்கு வர தடை அறிவித்திருக்கிறது. இது தொடர்பில் பக்ரைன் நாட்டின் விமான போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் மெக்சிகோ, ஈரான், துனிசியா, ஈராக், இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் மற்றும் தென்னாபிரிக்கா உட்பட 16 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு  தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு இந்தியா, இலங்கை, நேபாளம், வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு பஹ்ரைன் அரசு தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |