சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்து நேர்ந்ததால் 16 பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரங்கூர் கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள் சரக்கு வாகனத்தில் ஏறி விவசாய வேலைக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுநிலா கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து காரியானூர் ஜெயந்தி காலனி பகுதியில் சரக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த ஓரங்குர் கிராமத்தில் வசிக்கும் செல்லம்மாள், சின்னம்மா உள்ளிட்ட 16 பெண் கூலி தொழிலாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் கூலித் தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.