இந்த சீசனில் ஐபில் ஏலத்தில் ராஜஸ்தான் அணி ,தென்னாப்பிரிக்க வீரரான கிரிஸ் மோரிஸை ரூபாய் 16 .25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் ,அதிக விலைக்கு விலை போன வீரராக கிறிஸ் மோரிஸ் உள்ளார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரிஸ் மோரிஸை ,ராஜஸ்தான் அணி 16 .25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அவருடைய ஆரம்ப விலையே ரூபாய் 75 லட்சம் ஆகும். இதுவரை நடந்த 4 போட்டிகளில் ராஜஸ்தான் ,1 வெற்றியை பெற்று ,3 தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக வெற்றிபெற்ற போட்டியில் ,கிறிஸ் மோரிஸ் ராஜஸ்தான் அணிக்காக, சிறப்பாக விளையாடி இருந்தார்.
ஆனால் அதன்பிறகு நடைபெற்ற போட்டிகளில், ஆல்ரவுண்டரான கிறிஸ் மோரிஸ் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. அவர் பேட்டிங்கிலும் ,பவுலிங்கிலும் சொதப்பி வந்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றிருக்கும் கிரிஸ் மோரிஸ், 16 கோடிக்கு தகுதியானவர் அல்ல என்றும், அவர் அடித்தால் 2 போட்டிகளில் ரன் குவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது , அதன் பிறகு காணாமல் போவதற்கான வாய்ப்பும் இருப்பதாக , பீட்டர்சன் கூறியுள்ளார் .