Categories
தேசிய செய்திகள்

“ஆடுகள் வளர்த்த பணத்தில் 16 ஏரிகள்” சமூக ஆர்வலர் கல்மேன காமகவுடா மரணம்…. பொதுமக்கள் இரங்கல்….!!!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகாவில் தாசனதொட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சமூக ஆர்வலரான கல்மேன காமேகவுடா (84) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் சமூகத்தின் மீது மிகுந்த ஆர்வமும் இயற்கையின் மீது அதிக அக்கறையும் இருந்ததன் காரணமாக ஆடுகள் வளர்த்த வருமானத்தில் 16 ஏரிகளையும், தடுப்பணைகளையும் நிறுவியுள்ளார். அதன் பிறகு ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளையும் நட்டு சுற்று சூழலை பாதுகாத்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கல்மேன மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடைய சிகிச்சை செலவு மொத்தையும் அரசாங்கமே ஏற்றுக்கொண்டது. அதன் பின் உடல் நலம் தேறி வீடு திரும்பிய கல்மேன வயோதிகம் காரணமாக மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், திடீரென அவருடைய வீட்டில் இயற்கை எய்தினார்.

இவருடைய மறைவுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மையா மற்றும் முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சித்தராமையா, குமாரசாமி மற்றும் அமைச்சர்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை அரசு மரியாதையுடன் சொந்த கிராமத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Categories

Tech |