Categories
தேசிய செய்திகள்

மனம் மாறிய 16 நக்சலைட்டுகள்… ஆயுதங்களை தூக்கிப்போட்டு விட்டு… போலீசில் சரண்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகள் 16 பேர் தங்கள் பயங்கரவாத தாக்குதலை கைவிட்டு நேற்று போலீசில் சரணடைந்தனர்.

மேலாதிக்கம் உள்ளவர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்திவரும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் பொதுமக்கள், மற்றும் காவல் துறையினரின் மீது அவ்வப்போது பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த குழுவினரை பிடிப்பதற்கு மாநில சிறப்பு தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். மேலும், நக்சலைட்டுகள் செய்த குற்றங்களின் அடிப்படையில் தேடப்படும் நக்சலைட்டுகளை கண்டுபிடிக்க அரசு சார்பில் ஒரு தலைக்கு லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிப்பது உண்டு. காவல்துறையினரின் அதிரடி தேடுதல் வேட்டைகளை கண்டு பல நக்சலைட்டுகள் உயிருக்கு பயந்து திருந்தி வாழும் முயற்சியில் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் டன்டிவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகளாக செயல்பட்டு வந்த பெண்கள் உட்பட மொத்தம் 16 பேர் தங்கள் ஆயுதங்களை தூக்கிப் போட்டுவிட்டு நேற்று போலீசில் சரணடைந்துள்ளனர். சரணடைந்தவர்களில் 3 பேர் கமெண்டர் அளவிலான பெரிய நக்சலைட்டுகள் ஆவர். மேலும் அவர்களின் தலைக்கு சன்மானத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |