நகைக்கடை அதிபர் வீட்டில் இரண்டு பேரைக் கொன்றுவிட்டு 16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் இருக்கும் ரயில்வே ரோட்டில் நகைக்கடை அதிபரான தன்ராஜ் வீடு உள்ளது. திடீரென்று வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் நகைக்கடை உரிமையாளரின் குடும்பத்தினரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் நகைக்கடை அதிபரின் மனைவி மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தன்ராஜ் மற்றும் அவருடைய மருமகள் படுகாயமடைந்தனர். மேலும் அவர்கள் வீட்டில் இருந்த 16 கிலோ தங்கத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்