ஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் 16 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர எண்ணி அந்நாட்டு அதிபர் பயங்கரவாதிகளின் குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்தும், தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான் பயங்கரவாதிகள் அடிக்கடி பயங்கர தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் உள்ள பால்க் மாகாணத்தில் ஆலம் கில் என்ற பகுதியில் மறைமுகமாக பதுங்கியிருந்த தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த துல்லிய தாக்குதலில் 16 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். இதில் 3 பாதுகாப்பு படை வீரர்களும் படுகாயம் அடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.