Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எங்கே போனான்னு தெரியல…. சிறுமிக்கு நடந்த நிகழ்வு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் பிளஸ் 1 படித்து வரும் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 15 – ஆம் தேதி சிறுமி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கவுந்தபாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் பி.மேட்டுப்பாளையம் பகுதியில் கிட்டுசாமி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு கௌதம் என்ற மகன் உள்ளார்.

இவர் 16 வயது சிறுமியிடம் பழகி வந்ததும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவது தொடர்பான தகவல் பரவியதும் கௌதம் மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த சிறுமியை அழைத்து வந்து கவுந்தப்பாடி காவல்நிலையம் அருகில் விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில் சிறுமியை கடத்திச் சென்று கௌதம் கோபியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்க வைத்திருந்ததும், அதன்பின் ஒரு கோவிலுக்கு சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கௌதமை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு பெருந்தலையூர் பகுதியில் கௌதம் தலைமறைவாக இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கௌதமை மடக்கிப்பிடித்து கைதுசெய்துள்ளனர்.

Categories

Tech |