அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் 16 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அமெரிக்கா கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வந்தது . இப்போது மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதால் அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் “16 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடையவர்களும் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தக் கொடிய வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இதை தவிர வேறு வழி இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த தடுப்பூசி இலவசமாகவும் கிடைக்கிறது .
மேலும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் உறுதியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் “என்றும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் தற்போது வரை கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 17 16 799- ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.67 லட்சமாக உள்ளது.இதுபோன்ற உயிரிழப்பு மீண்டும் ஏற்படாமல் தடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார் .