Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

16 வயதான நடிகைக்கு…. 20 வயது காதலன்…. பிரபல நாட்டில் சர்ச்சைகுள்ளான சம்பவம்….!!

அமெரிக்காவை சேர்ந்த 16 வயது பெண் தனது காதலனுடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 16 வயது நடிகை ஹனி பூ பூ. இவர் 20 வயதாகும் தனது காதலன் ட்ரோலின் கார்வேல்ஸ் உடனிருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த நிலையில் 16 வயதுள்ள  பெண் 20 வயதாகும் ஒருவரை டேட்டிங் செய்வதால் சமூகவலைதளங்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டார்.

இதனையடுத்து “தன்னைவிட 4 வயது மூத்தவரையா டேட்டிங் செய்வது?” என ஒருவரும்  “16 மற்றும் 20 வயதுடைய இவர்களுக்கு பெற்றோர் எங்கே?” என்று மற்றொருவரும் விமர்சித்திருந்தனர் . இதனால்  ஹனி தான் வெளியிட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கினார்.

Categories

Tech |