திருச்சியில் 14 வயது சிறுவன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியாதல் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 68 வயதான மூதாட்டி கணவர் இறந்த நிலையில் ஜவுளி விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி தண்ணீர் பிடிப்பதற்காக மூதாட்டியை எழுப்ப அக்கம்பக்கத்தினர் சென்றபோது வீட்டின் வெளியே ரத்தக்கரை இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது மூதாட்டி நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அனுப்பினார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் கொண்டு சோதனை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த யாரோ ஒருவர் செய்திருப்பது தெரியவந்தது. பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் சிறுவன் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் இருந்துள்ளார். அவரை பிடித்து விசாரித்தபோது மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுவன் மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார்.
கடந்த 31ஆம் தேதி இரவு போதையில் மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்து கல்லால் தாக்கி உள்ளார். அதன்பிறகு நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு மூதாட்டியின் சடலத்தை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.