Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சர்க்கரை நோய்” 16 வயது மாணவி திடீர் மரணம்….. கோவையில் சோகம்…!!

கோவையில் 16 வயது மாணவி  சர்க்கரை நோயால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம்  பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் சக்திக்கு 16 வயது முதலே  சர்க்கரை நோய் இருந்துவந்துள்ளது. தற்பொழுது 16 வயதான சக்திக்கு பல்வேறு இடங்களில் சர்க்கரை நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும்  பயனின்றிப் போக சக்தியினை அவர் தந்தை கோயம்புத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து வந்து பின் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின் நேற்றையதினம் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவர் அவரை பரிசோதித்து விட்டு ஊசி போட்டால் சரியாகிவிடும் என்று கூறி வீட்டிற்கு அனுப்பிவிட்டார். வீட்டிற்கு வந்ததும் உடல்நிலை இன்னும்  மோசமாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்ட சிறுமியின் தந்தை கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |