Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி…. ” சீரழித்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை” வச்சு செய்த நீதிமன்றம் …!!

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(27). இவர் கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த அருகம்பாளையம் பகுதியில் பெயிண்ட்டராக வேலை செய்துவந்தார்.

இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அன்னூர் காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டு சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார்.

குற்றவாளி

இதனையடுத்து காவல் துறையினர் பாதுகாப்புடன் சதீஷ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Categories

Tech |