இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு நபர் கைதாகியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் Lanesfield என்னும் பகுதியில் கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று 16 வயதுடைய ரோனன் கந்தா என்ற சிறுவன் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினரும், மருத்துவ உதவி குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர்.
எனினும், சிறுவன் அங்கேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு இளைஞர் மற்றும் 16 வயது சிறுவர்கள் இருவர் கைதாகினர். இந்நிலையில், பர்மிங்காம் பகுதியில் வசிக்கும் ஜோசப் என்ற நபரும், சிறுவன் கொலை வழக்கில் கைதாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். கொலைக்கான காரணம் வெளியாகவில்லை. இன்று ஜோசப் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.