நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 -7 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில் தற்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ரஜினி நானும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றோம். ரஜினி உடல்நலம் தொடர்பான அறிக்கையில் இடம் பெற்றிருந்த தகவலும் எனக்கு முன்கூட்டியே தெரியும். ரஜினியின் உடல் நலமும் முக்கியம்.சட்டப்பேரவையில் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச இது சரியான தருணம் இல்லை.
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கின்றோம்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகத்தை தற்போது வெளியிட முடியாது. தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்பதுதான் பெரிய பிரச்சனை. 100 முதல் 160 தொகுதிகளில் மக்கள் நீதி மையம் தாக்கத்தை ஏற்படுத்தும். பல ஊர்களில் அடிப்படைத் தேவைகளை இன்னும் பூர்த்தியாகாமல் உள்ளன. பொங்கல் போன்ற விழாக்களில் பொதுமக்களுக்கு பணம் கொடுக்கும் அரசு, கொரோனா காலத்தில் ஏன் தரவில்லை?
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் போன்றோரை மக்கள் நீதி மையம் மதிக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தால் நேர்மையான அதிகாரிகள் பாதிக்கப்பட மாட்டார்கள். .திரைக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு அந்த காலத்திலிருந்தே தொடர்கிறது. நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். மக்கள் நீதி மையத்தின் குரல் தமிழக சட்டசபையில் ஓங்கி ஒலிக்கும. சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக நான் போட்டியிடுவேன். மக்கள் நீதி மையத்தின் முதலமைச்சர் வேட்பாளர் என்பது எனக்கு ஒரு பெரிய பொறுப்பு. இளைஞர்களுக்கான வேலையை யார் வாங்கி தருவது என்பதுதான் எனது முதல் நோக்கம்.
சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கலாம். வேல் யாத்திரையை விட இளைஞர்களுக்கு வேலை தேவை என்பதுதான் முக்கியம். நான் எந்த கட்சியின் பீ டீம் இல்லை, எப்போதும் நான் ஏ டீம். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எட்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது.பண்டிகையின் போது மட்டும் அல்ல தேர்தலின்போது மக்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் அவர்களுக்கு ஏன் பணம் உதவி செய்யவில்லை என கமல் தெரிவித்தார்.