Categories
மாநில செய்திகள்

1600 பக்க குற்றப்பத்திரிகை… பப்ஜி மதன் மனைவி மீது மோசடி வழக்கு…!!!

இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி மதன் மீது 1600 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பப்ஜி கேமை ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி விளையாடி அதனை யூட்யூபில் பதிவேற்றம் செய்ததற்காக குண்டர் சட்டத்தின் கீழ் மதனும்  அவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கிருத்திகாவிற்கு ஜாமின் வழங்கப்பட்டது. தற்போது மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர்.

32 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா காலத்தில் உதவி செய்வதாக கூறி 2848 பேரிடம் ரூ. 2.89 கோடி பணம் மோசடி செய்துள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் இருவரின் மீதும் மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மதனின் மனைவி கிருத்திகாவை இதில் இரண்டாவது குற்றவாளியாக சேர்த்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |