Categories
தேசிய செய்திகள்

161 அடி உயர ஆஞ்சநேயர் சிலை… இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…. எங்கு தெரியுமா…!!!!!

துமகூருவில் அமைக்கப்பட்டிருக்கின்ற  161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா பிதனகெரே கிராமத்தில் பசவேசுவரா மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்ட ஆஞ்சநேயசாமி சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேய சாமி சிலையாக இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆஞ்சநேயர் சாமி சிலை இன்று ராம நவமியை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக இந்த 171 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமை தாங்க உள்ளார். இதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக துமகூருவுக்கு முதல் மந்திரி பசவராஜ் பொம்மை செல்கிறார். அதன்பின் ஆஞ்சநேயர் சாமி சிலை திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார்.

Categories

Tech |