விவசாயிகளிடமிருந்து 16,352 மெட்ரிக் டன் நெல் முட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை நேரடியாக வாங்கி வருகிறது. இந்நிலையில் அந்த நிலையங்களில் செயல்பாடுகள், அதை மேம்படுத்தும் நடவடிக்கை குறித்து கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பின்னர் விவசாயிகளிடம் இருந்து நெல்களை விரைவாக வாங்கி கொள்ளுவதற்காவும் மற்றும் சேமிப்புகள் வைக்கப்பட்டிருக்கும் கிடங்கிற்கு விரைந்து கொண்டு செல்வதற்காவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து குமாரமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த கலெக்டர் அங்கே செயல்பாடு குறித்து விவசாயிகளின் கருத்தை கேட்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து பருவமழை காலம் தொடங்கி வருவதால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்களின் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாப்பதற்காகவும் மற்றும் சேமிப்புக் கிடங்கிற்கு விரைவாக எடுத்துச் செல்ல அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இம்மாவட்டத்தில் 3,112 விவசாயிடமிருந்து 16,352 மெட்ரிக் டன் நெல்களை கொள்முதல் செய்யப்பட்டு வந்துள்ளது.