Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் இன்று 165 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி… மும்பையில் மட்டும் 107 பேர் பாதிப்பு!

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 165 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3081 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 2ம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 23வது நாளாக அமலில் உள்ளது. மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தான் உண்மை.

இன்று காலை கிடைத்த தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. அதில், 10,477 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1489 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும் இறப்புகள் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. கேரளா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கொரோனா பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீது வருவது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |