Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிக்கிய 1,650 மது பாட்டில்கள்… சட்டவிரோதமாக மது விற்பனை… 3 பேர் கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. எனவே சட்டத்திற்குப் புறம்பாக பலரும் மது விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் எருமைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையில் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து திப்ரமகாதேவியில் சோதனை செய்து செய்து கொண்டிருந்தபோது கோபி(40) மற்றும் மதன் என்ற இருவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனைதொடர்ந்து வளையப்பட்டி அருகே ரகுபதி என்பவரும் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 1,650 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |