Categories
அரசியல்

“வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்” தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி …!!

தேர்தல் வாக்குப்பதிவுக்கான அணைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்  இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் .

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற  உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை நேற்றோடு முடிவடைந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துவருகின்றன.இதையடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்திக்கையில் ,தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 4 ஆயிரத்து 400 வழக்குகள் பதிவு செய்ப்பட்டிருக்கின்றது , வருமானவரித்துறையின அறிக்கையின்படியே வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்று தெரரிவித்தார். 

 

 

தொடர்ந்து பேசிய  சத்யபிரதா சாகு  பிஎஸ்கே குழுமத்தில் நடைபெற்ற சோதனை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டும்.   ஆண்டிப்பட்டி வருமானவரித்துறை சோதனை விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவியின் மூலம் கண்காணிக்கப்படும். வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். 

Categories

Tech |