செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. அதில் சென்னை முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னையில் இருந்து அதன் அருகாமை பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். செங்கல்பட்டில் நேற்று மட்டும் 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,569 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 1,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 1,404 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செங்கல்பட்டில் மட்டும் இதுவரை கொரோனோவால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி செங்கல்பட்டில் மேலும் 85 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போதைய நிலவரப்படி மேலும் 84 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2,738 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை புறநகர் பகுதிகள் கடமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்லாவரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. தாம்பரம், பரங்கிமலை பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நோய் கண்டறியப்படுபவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் கொரோனா உறுதி செய்யப்படுபவர்களின் குடும்பத்தினர் தனியாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.