Categories
தற்கொலை மதுரை மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு அச்சம்”… தொடரும் தற்கொலைகள்… பதறும் பெற்றோர்கள்…!!

நீட் தேர்வு பயத்தின் காரணமாக மதுரை மாவட்ட காவல் உதவியாளர் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் நீட் தேர்விற்கான பயம் இன்னும் மாணவர்களை விட்டு விலகவில்லை. அதனால் தான் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் தற்பொழுது தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு குறித்த மன அழுத்தம் காரணமாக அதிக தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம், தல்லாகுளம் பட்டாலியன் காவல்குடியிருப்பை சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் முருகசுந்தரம். இவருக்கு ஜோதி துர்கா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

இவர் சென்ற ஆண்டு  நீட் தேர்வு எழுதி மதிப்பெண் குறைவாக இருந்ததால், இந்த ஆண்டிற்கான நீட் தேர்விற்கு தீவிரமாக படித்து  கொண்டிருந்தபோது நேற்று இரவு தனது தந்தை முருகசுந்தரிடம் தேர்வு குறித்து பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் விடிந்ததும் தேனீர் வழங்குவதற்காக ஜோதியின் அறையை திறந்து பார்த்த பொழுது, அவர் மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |